மலேசியாவில் கடந்த வாரம் நடைபெற்ற தேர்தல்களில் மோசடிகள் இடம்பெற்றதாகக் கூறி அதற்கு எதிராக எதிர்கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த கண்டனக் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.
அன்வர் இப்ராஹிம் தலைமையிலான மக்கள் கூட்டணியால் விடுக்கப்பட்ட இந்த அழைப்பு சட்டவிரோதமானது என்று காவல்துறையிருந்ததையும் கூறியதை மீறி இந்தப் போராட்டம் நடைபெற்றுள்ளது.
பிரதமர் நஜீப் ரசாக் தலைமையிலான கூட்டணி மோசடி மூலம் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றது என்று எதிர்தரப்பு குற்றஞ்சாட்டி இந்தப் போரட்டத்தை நடத்தினர்.
ஆனால் தோல்வியை ஏற்றுக் கொள்ள மனமில்லாமால் இவ்வகையான போராட்டங்களில் அன்வர் இபராஹிம் ஈடுபடுவதாக ஆளும் தரப்பு கூறுகிறது.
கடந்த ஞாயிறன்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் தலைமையிலான தேசிய முன்னணி 133 இடங்களிலும், எதிரணி 89 இடங்களிலும் வெற்றி பெற்றன.
மலேசியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து தேசிய முன்னணியே ஆட்சியில் இருந்து வருகிறது. எனினும் இந்தத் தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் குறைந்த அளவிலான இடங்களிலேயே அக்கூட்டணி வென்றது.
புதன்கிழமை நடைபெற்ற இந்த எதிர்ப்புக் கூட்டத்தில் 50,000 பேர் வரை கலந்து கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அன்வர் இப்ராஹிம் தலைமையிலான மூன்று கட்சிக் கூட்டணி, வாக்குகள் மீண்டும் எண்ணப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.
இத்தேர்தலில் பல்லாயிரக்கணக்கான போலி வாக்காளர்கள் இருந்தனர் என்றும், கையில் வைக்கப்பட்ட அடையாள மையும் எளிதில் அழிக்கும் வகையில் இருந்தது என்றும் எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.
Post a Comment