புதுடில்லி: சீன படைகள், வாபஸ் பெற்ற விவகாரத்தில், இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே, எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை,'' என, வெளியுறவு அமைச்சர், சல்மான் குர்ஷித் கூறினார்.வெளியுறவு அமைச்சர், சல்மான் குர்ஷித் கூறியதாவது:
காஷ்மீரின் லடாக் பகுதியில், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன ராணுவம், முகாம்களை அமைத்தது. சீன ராணுவத்தை, வாபஸ் பெற வைப்பதற்காக, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையடுத்து, 21 நாட்களுக்கு பின், இந்திய எல்லையிலிருந்து, சீன ராணுவம், பின்வாங்கியது.
இந்த விவகாரத்தில், இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே, எந்தவிதமான, சர்வதேச அளவிலான ஒப்பந்தமும் ஏற்படவில்லை.
என்னுடைய சீனப் பயணத்தின்போது, இரு நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர உறவை மேம்படுத்துவது குறித்த, பேச்சுவார்த்தை நடைபெறும்.இவ்வாறு, சல்மான் குர்ஷித் கூறினார்.
Post a Comment