மலைகள் நிறைந்த ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் தனியாருக்கு சொந்தமான ஒரு பேருந்து சாலையிலிருந்து சறுக்கி, வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ஆற்றில் விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாக இருக்கும் குலு நகரிலிருந்து இந்தப் பேருந்து புறப்பட்டது.
எனினும் அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் அதிகப்படியான பயணிகளை ஏற்றிச் சென்று விபத்துக்கு உள்ளான அந்தப் பேருந்தில் எவ்வளவு பேர் இருந்தார்கள் என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
பேருந்து சறுக்கி விழுந்த ஆற்றின் வேகம் அதிகமாக இருந்த காரணத்தால் மேலும் பலர் அதில் அடித்துச் செல்லப்பட்டிருக்கக் கூடும் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.
இந்தியாவில் சாலை விபத்துக்கள், அதிலும் குறிப்பாக மலைப்பாங்கான பகுதிகளில் இருக்கும் குறுகிய சாலைகளில் அவ்வகையான விபத்துகள் அடிக்கடி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தகுந்தது.
Post a Comment