கச்சத்தீவுப் பகுதியில் இலங்கை போர்க் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் ராமேஸ்வரம் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். பத்துக்கும் மேற்பட்ட கப்பல்கள் மற்றும் மிதவைகளும் கச்சத்தீவுப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வழக்கம் போல் கடலுக்குசென்றபோது, கச்சத்தீவு பகுதியில் இலங்கை போர்க் கப்பல்கள் நிறுத்திவைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்தால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என இலங்கை கடற்படையினர் எச்சரித்து அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, ராமேஸ்வரம் மீன்துறை உதவி இயக்குநரிடம் கேட்டதற்கு, மீனவ சங்க பிரதிநிதிகளிடமிருந்து தகவல் வந்துள்ளதாகவும், இதுகுறித்து மீனவர்களிடம் நாளை முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
Post a Comment