"தினத்தந்தி' நாளிதழ் அதிபர், சிவந்தி ஆதித்தனின் மறைவுக்கு, அஞ்சலி செலுத்த சென்றபோது, சென்னை போயஸ் தோட்டத்தில் இந்த சந்திப்பு, நேற்று காலை நடந்தது. அஞ்சலி செலுத்திவிட்டு, விஜயகாந்த் வெளியில் கொண்டிருந்தபோது, எதிரே, காரில் கருணாநிதி வந்தார். இருவரும், நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். காரிலிருந்த, கருணாநிதிக்கு, விஜயகாந்த் வணக்கம் செலுத்த, கருணாநிதியும் பதில் வணக்கம் செலுத்தினார். அப்போது, தி.மு.க., துணை பொதுச் செயலர் துரைமுருகன் உடனிருந்தார். அண்மை காலத்தில், இரு தலைவர்களும் நேருக்கு, நேர் சந்திப்பது இதுவே முதல்முறை.
அ.தி.மு.க.,வுடன் பிளவு ஏற்பட்ட பின், தி.மு.க.,வும், தே.மு.தி.க.,வும் நெருங்கி வருகின்றன. லோக்சபா தேர்தலில், இரு கட்சிகளும் கூட்டணி அமைக்கும் என்ற பேச்சு அதிகரித்து வரும் நிலையில், இந்த சந்திப்பை, தி.மு.க., மிக முக்கியமானதாகக் கருதுகிறது.
இதனால், இச்சந்திப்பு தொடர்பான, புகைப்படத்தை, தி.மு.க.,வே வெளியிட்டும் உள்ளது. "விஜயகாந்த், எங்கள் பக்கம் இருக்கிறார்' என்ற தோற்றத்தை, தி.மு.க.,வே ஏற்படுத்தியுள்ளது. இச்சந்திப்பு பற்றி, தே.மு.தி.க., தரப்பிலிருந்து தகவல்கள் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.
Post a Comment